அதிகாலை வேளை தனில்
பொன்னிற பட்டணிந்து
வான வீதியெங்கும் விழா பரப்பி
அழகிய வண்ணமுடன்-வந்து
நிற்கின்றான் மன்னவன்!
தலைவனைக் கண்ட
செவ்விதழ் மேனியாள்-தன்
உடல் சிலிர்த்து வியர்க்கின்றாள்!
அவனது செங்கதிர் பூண்ட
விழியின் ஒளியினிலே
அகன்றது பனித்துளிகள்!
தன் மெய்யவனைப் பார்த்து
நாணுகின்றாள் இம்மங்கையவள்!