Friday, March 27, 2015

அரிச்சந்திரன் கதை - தோற்றம்


அயோத்தியை 'திரிசங்கு' என்னும் அரசன் ஆட்சி புரிந்து வந்தான். சூரிய குலத்தில் தோன்றிய அவன் சகல சாத்திரங்களையும் வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தவன். ஈகையில் சிறந்த மன்னன். நாட்டை சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தான்.
அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு 'அரிச்சந்திரன்' என்று பெயர் சூட்டப்பட்டது. பாராட்டிச் சீராட்டி வளர்ந்த அறிச்சந்திரனுக்குத் தக்க வயது வந்தவுடன் வசிஷ்ட மாமுனிவரிடம் கல்வி, கலைகள் கற்க சேர்க்கப்பட்டான். அனைத்திலும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றான்.
வாலிபப்பருவம் அடைந்த அரிச்சந்திரனுக்கு அரச மரபில் பிறந்த குணவதியான 'சந்திரமதி' என்னும்  அழகு மங்கையைத் திரிசங்கு மன்னன் மணமுடித்து வைத்தான்.
இளவரசன் அரிச்சந்திரனும் சந்திரமதியும் மனமொத்த தம்பதியராய் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

No comments: